சிவகாசி பஸ்நிலையத்தில் வாகன நெருக்கடியால் பயணிகள் அவதி

சிவகாசி, மே 22: சிவகாசி பஸ்நிலையத்தில் டூவிலர்களை நிறுத்தி செல்வதால் இட நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் கடும் அவதிப் படுகின்றனர். சிவகாசி பஸ்நிலையம் சுமார் 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 50 க்கும் மேற்பட்ட அரசு நகர பஸ்கள், 30 க்கும் மேற்பட்ட அரசு புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பேருந்து நிறுத்தங்கள் அமைக்க பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நின்று செல்லும் இடங்களில் டூவிலர்களை சிலர் தினமும் நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் பஸ்நிலையத்தின் மைய பகுதியில் நின்று பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்கிறது. பஸ்கள் வெளியே செல்லும் பாதையை ஆக்கிரமித்து வரிசயைாக டூ வீலர்களை நிறத்தி செல்கின்றனர். பஸ்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றன. பஸ் நிலையத்தில் உள்ள பஸ் பே வளாகம், பஸ் கட்டண முன்பதிவு மையம், டைம் கீப்பர் ஸ்டால்கள் அருகே டூ வீலர், சைக்கிள்களை நிறுத்தியுள்ளனர். பஸ் நிலையத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் உள்ளது. இங்கும் வாகனங்கள் நிறுத்த படுகிறது. போலீசார் பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சிவகாசி பஸ்நிலையயத்தில் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்