சிவகாசி தெய்வானை நகரில் ரூ.2 கோடியில் சாலை பணி

 

சிவகாசி, ஜூலை 22: சிவகாசி மாநகராட்சி 42 மற்றும் 46வது வார்டுக்குட்பட்ட தெய்வானை நகரில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி மாநகராட்சி தெய்வானை நகர் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தெய்வானை நகரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் சாலை வசதி செய்து தரப்படாததால் வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை மற்றும் மழை நீர்வடிகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை