சிறப்பு கிராம சபை கூட்டம்

காரிமங்கலம்: காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் நடந்தது. பைசுஅள்ளி பஞ்சாயத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் விஜயா தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மாதையன், பஞ்சாயத்து செயலாளர் குமார், சுப்பிரமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மல்லிகுட்டையில் நடந்த கூட்டத்திற்கு, பஞ்சாயத்து தலைவர் பச்சையம்மாள் சிவராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் வேடி அம்மாள் முன்னிலை வகித்தார். செயலாளர் தனபால் வரவேற்று கிராம சபை தீர்மானங்களை வாசித்தார். வார்டு உறுப்பினர்கள் வீராசாமி, வேடியப்பன், பெருமாள், சக்திவேல், பாக்கியம், பட்டு, மஞ்சு, பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவிலூர், காளப்பனஅள்ளி, பெரியாம்பட்டி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி உட்பட பல்வேறு பஞ்சாயத்துகளில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பஞ்சாயத்து தலைவர்கள் தமிழ்செல்வி நந்திசிவம், பிரியா செந்தில்குமார், ஜெயலட்சுமி சங்கர், குமார், தமிழ்செல்வி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி