சிறந்த ஆற்றல் சேமிப்பு விருது அரியலூர் டால்மியா சிமென்ட் சாதனை

அரியலூர், செப்.21: அரியலூர் டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கு 2023ம் ஆண்டிற்கான சிறந்த ஆற்றல் சேமிப்பு விருதை இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய அளவில் வழங்கியுள்ளது. தொடர்ந்து 12வது ஆண்டாக இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் டால்மியா சிமென்ட் அரியலூர் ஆலை தேசிய அளவில் 4வது முறையாக சிறந்த ஆற்றல் சேமிப்பு தலைமை விருதை வென்றுள்ளது. இவ்விருதுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக இவ்விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது டால்மியா நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் சரவணன், சுற்றுச்சூழல் தலைவர் பிரசன்னா, செயல்பாட்டு மேலாளர் முருகன் உடன் இருந்தனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு