சின்ன குன்னூர் பகுதியில் முன்னதாகவே பூத்தது நீல நிற ஜெகரண்டா மலர்கள்

 

ஊட்டி, ஜன.5: ஊட்டி அருகேயுள்ள சின்ன குன்னூர் பகுதியில் முன்னதாகவே பூத்தது ஜெகரண்டா மலர்கள். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சோலை மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்துக்குலுங்கும். இவைகள் பல வண்ணங்களில் பூக்கும் நிலையில், இவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் பல்வேறு வகையான சோலை மரங்கள் பூக்கும். குறிப்பாக, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள், சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் போன்றவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

தற்போது ஊட்டி அருகேயுள்ள சின்ன குன்னூர், எப்பநாடு போன்ற பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களின் நடுவே, நீல நிறத்தில் ஜெகரண்டா மலர்கள் பூத்துள்ளன. பொதுவாக இவைகள் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் பூத்துக்குலுங்கும். ஆனால், இம்முறை சற்று முன்னதாக பூத்துள்ளன.
இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

Related posts

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு