சின்னபாறையூரில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி, அக்.21: காவேரிப்பட்டணம் ஒன்றியம், சின்ன பாறையூரில் கன்னிமூல கணபதி, ஐயப்ப சுவாமி, பாலசுப்பிரமணி சுவாமி ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஐயப்பா சுவாமிக்கு 2ம் கால பூஜைகள், ராகதாள வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. நேற்று பம்பை முழங்க விமான கோபுரம், கன்னிமூல கணபதி, ஐயப்ப சுவாமி பாலசுப்ரமண்ய சுவாமிகளின் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்