சிந்தாமணி கிராமத்தில் உலர்களம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்துள்ள விக்கிரவாண்டி எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளைவித்த பொருட்களான மணிலா, சோளம், கேழ்வரகு, உளுந்து உள்ளிட்ட விவசாயிகள் பொருட்களை அறுவடை செய்து அதனை காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு எடுத்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளைவித்த பொருட்களை உலர வைப்பதற்கு மேற்கண்ட சர்வீஸ் சாலையை உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விளைபொருட்களின் மீது வாகனங்கள் ஏறி செல்வதால் பொருட்களின் தரம் குறைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும் சர்வீஸ் சாலையை விவசாயிகள் உலர்களமாக பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே அரசு, இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி உலர்களம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு