சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி மாணவன் பலி

தாம்பரம்: வண்டலூர் தெருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரண் (17). மண்ணிவாக்கம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று இரவு தனது நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது, வண்டலூர் ஏரி அருகே சாலை வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பைக் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த சரண், ரத்த  வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்