சாலையோரத்தில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

ஈரோடு, ஏப்.4: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதி ஒசபாளையத்தை சேர்ந்தவர் மாதேவன். தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூங்கோதைக்கு திடீரென நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் மாதேவன் வீட்டுக்கு விரைந்து வந்து அங்கிருந்து நந்தினியை பரிசோதித்து விட்டு, பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.

அப்போது, கோவை நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே வந்த போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்சு ஓட்டுநர் ராஜ்குமார் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மருந்துவ நுட்புநர் விஜய் உள்ளிட்ட குழுவினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நந்தினிக்கு பிரசவம் பார்த்தனர். இதில், நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் விஜய், ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை அதிகாரிகளும், மக்களும் பாராட்டினர்.

Related posts

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கஞ்சா விற்ற 3 வாலிபர் கைது

சாலையோர கல்லில் பைக் மோதி மில் தொழிலாளி பலி