சாந்தி மருத்துவமனை சார்பில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சிறப்புமிக்க மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு நிகழ்ச்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட இருதய விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தமிழரசன், மருத்துவர் பிரிதிவிராஜ் கலந்து கொண்டனர். மருத்துவர் அன்பரசன், மருத்துவர் கவுதமி தமிழரசன் வாழ்த்தி பேசினர். விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புறப்பட்டு, மேம்பாலம், கூலக்கடை பஜார், காசிவிசுவநாதர்கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், பேருந்து டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன்முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரிபெரல் ஆஞ்சியோகிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்