சாத்தான்குளத்தில் 2 எஸ்ஐக்கள் குமரிக்கு மாற்றம்

சாத்தான்குளம், நவ. 30: சாத்தான்குளம் எஸ்ஐக்கள் விஜயகுமார், பால்மணி ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி செல்வதையொட்டி பிரிவுபசார விழா நடந்தது. சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்ஐக்கள் விஜயகுமார், பால்மணி ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதல் பெற்றுள்ளனர். இவர்களுக்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரிவுபசார விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் முத்து தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் சுரேஷ்குமார், ரத்தினராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்நிலை காவலர் கணேசன் வரவேற்றார். வழக்கறிஞர் வேணுகோபால், காவலர் சுந்தர், தனிப்பிரிவு காவலர் விக்ராந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் தியோனிஸ்சசிமார்சன், அழகு ராமகிருஷ்ணன், செல்வ மகாராஜன், வினோத், காவலர்கள் குமார், ரோஸ்லின், வருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். பணி மாறுதலான விஜயக்குமார், பால்மணி ஏற்புரை ஆற்றினர். தனிப்பிரிவு காவலர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்