சதுரகிரி நுழைவுவாயில் முற்றுகை

திருவில்லிபுத்தூர், ஆக.12: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் வரும் 17ம் தேதி வரை மொத்தம் ஆறு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் மலைப் பாதையில் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும், வனத்துறை சார்பாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் வனத்துறை கேட் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்