கோவை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகம் சென்னைக்கு மாற்றம்

சென்னை: கோவையில் இயங்கி வந்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இயங்கி வந்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 8ம் தேதி கிண்டியில் திறந்து வைத்தார். 2022-23ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் நஞ்சில்லா உணவு பொருட்களை விளைவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு, அவர்களது விளைப்பொருட்களில் உள்ள நச்சு பொருட்களின் தன்மையை அறிந்து அதன் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை முழு மானியத்தில் வழங்கும் பொருட்டு, ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பினை பின்பற்றி, பகுப்பாய்வு மாதிரி ஒன்றிற்கு ஆகும் கட்டண தொகை ரூ.4,720 முழு மானியமாக அங்கக விவசாயிகளுக்கு அரசால் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற அங்கக பண்ணை விவசாயிகளுக்கு வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் வாய்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாண்புமிகு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாய குழுக்கள் மற்றும் விதைச்சான்று (ம) அங்கக சான்று துறை மூலமாக அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்