கோவை போலீசாருக்கு 17 ரோந்து ஜீப்

கோவை: கோவை மாநகர போலீஸ் எல்லையில் 15 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. 44 ரோந்து வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது கூடுதலாக 17 ரோந்து ஜீப் புதிதாக பெறப்பட்டுள்ளது.சிவப்பு நிறத்தில் நவீன வசதிகள் கொண்ட இந்த வாகனத்தை டி.ஜி.பி அலுவலகம் கோவை மாநகர போலீசுக்கு ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளது. இந்த வாகனத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். வாகனங்களுக்கான பதிவு எண் மற்றும் ஆவணங்கள் பதிவு செய்த பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் வசதியுள்ளது. வாகனம் எந்த இடத்தில் ரோந்து பணியில் இருக்கிறது, எவ்வளவு தூரம் சென்று வந்துள்ளது என்ற விவரங்களை ஜி.பி.எஸ் மூலமாக காண முடியும். வாகனங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவித்து இயக்க முடியும். பொதுமக்களின் புகாரின் பேரில் விரைவாக சென்று விசாரிக்க வசதியாக இந்த வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோந்து வாகனத்தில் மூன்று வண்ண விளக்கு, சைரன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன….

Related posts

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!