கோவை ஆவாரம்பாளையத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தீ

 

கோவை, மார்ச் 25: கோவை ஆவாரம்பாளையம் லட்சுமிபுரம் பகுதியில் கார்களை சர்வீஸ் செய்து தரும் ஒர்க் ஷாப் உள்ளது. அங்கு ஏற்கனவே இரண்டிற்கு மேற்பட்ட கார்கள் சர்வீஸ் செய்து கொண்டிருப்பதால், சர்வீஸிற்கு வந்த மற்ற கார்களை ஒர்க் ஷாப் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீடீரென தீப்பிடித்து எறிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோவை தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இதனால் தீ அருகே நின்று கொண்டிருந்த மற்ற காரில் பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும், இது குறித்து தகவல் அறிந்த கோவை காட்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த காய்ந்த புற்களில் பொதுமக்கள் சிலர் தீவைத்துள்ளனர். அந்த தீ காரிலும் பரவியது விசாரணையில் தெரியவந்தது.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி