கோவிந்தவாடி ஆதிதிராவிடர் நல பள்ளி கட்டட பணியை தொடங்க வேண்டும்: கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தவாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 436 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை வசதி இல்லாத காரணத்தினால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி முதல் கட்டமாக கட்டுமான பணி துவங்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கட்டுமான பணி துவக்கிட ஆவணம் செய்யுமாறு கிராம பொதுமக்கள் மற்றும் விசிக மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதி.ஆதவன், தொகுதி துணை செயலாளர் ஸ்டேன்லி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டான்லி, கோவிந்தவாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்