கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா

 

மன்னார்குடி, டிச. 27: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 1ம் வார்டில் இயங்கி வரும் இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நகர்மன்ற உறுப்பினர் தனலெட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இல்லம் தேடி கல்வி இயக்க மாவட்ட ஒருங் கிணைப்பாளர் முரளி முன்னிலை வகித்தார்.

இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், கற்பகத்தரு என்று அழை க்கப்படும் பனை மரங்கள் நிலத்தடி நீரை தக்க வைக்கவும் மண் அரிப்பை தடுக்கவும் நம் முன்னோர்களால் ஏரி மற்றும் குளக்கரைகளில் நட்டு வளர் க்கப் பட்டது. பல வகையான உணவுப் பொருட் களை யும், பலருக்கு வாழ் வாதாரமாகவும் இருக்கக்கூடிய பனைமரங்களை நட்டு வளர்க்க வேண்டிய கடமை நம் அனை வருக்கும் இருக்கிறது.

பனை மரத்தில் இருந்து கீழே விழுகின்ற விதைகளை சேகரித்து ஆறு, குளக் கரைகளில் விதைப்பதன் மூலம் மரங்களின் எண்ணிக் கையை அதிகப் படுத்த முடியும் என்றார். கடந்த ஒரு வார காலமாக நடந்த இந்த பனை விதைப்பு இயக்கத்தில் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்கள் பங்கேற்று கோரை யாற்றங்கரை யில் சுமார் 1500 பனை விதைகளை நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது