கோயில் யானைகளிடம் கனிவு காட்ட வேண்டும்: பக்தர்கள் உணவு வழங்க தடை; யானைகளுடன் புகைப்படம் எடுக்க கூடாது; கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: கோயில் யானைகளை கடுமையாக நடத்தக் கூடாது. அதனுடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: யானைகளை அன்புடன் நடத்த வேண்டும். யானைகளை கடுமையாக நடத்த கூடாது. யானைகளின் வாலைப் பிடித்து இழுத்து குறும்பு செய்தல் கூடாது. யானைகளின் மீதுள்ள முடிகளை அகற்றுவது போன்ற இயற்கைக்கு மாறான செயல்களை செய்யக் கூடாது. கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமே யானைகளை பயன்படுத்த வேண்டும். யானைகள் கோயில் வளாகத்தில் இருக்கும்போது பக்தர்கள் உணவு வழங்குவதை தடை செய்ய வேண்டும். உணவு ெதாகையை யானைப் பராமரிப்பிற்கென உண்டியலில் செலுத்தலாம். யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது. மேலும் யானையின் பரிசோதனைக்கு வரப்பெறும் மருத்துவரின் வருகை மற்றும் அவரது சிகிச்சை பரிந்துரைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு பேணி பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்