கொள்ளிடம் சோதனை சாவடியில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ₹1.33 லட்சம் பறிமுதல்

 

கொள்ளிடம், மார்ச் 20: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் பறக்கும் படை சர்வேலைன்ஸ் குழுவினர் தலைமை உதவியாளர் சுதமதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி சென்ற சொகுசு காரினை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 1200 யூரோ கரன்சி (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து 8600) மற்றும் இந்திய ₹25 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ₹1 லட்சத்து 33,600 எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதொகையை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.

Related posts

மாநில அளவிலான தடகள போட்டி துவக்கம்

துறையூர் அருகே தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

துறையூர் பகுதியில் தொடர் மழை அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்