கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

 

கொள்ளிடம்,மார்ச் 14: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆதிதிராவிட பழங்குடி சமுதாய மீனவர்களுக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம் கடல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பி அருள் மூர்த்தி நெட்பிஷ் தலைமை வகித்தார். இந்த பயிற்சி முகாமில் ஆதிதிராவிட பழங்குடி இன சமுதாய மீனவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். இந்த பயிற்சி முகாமை மீன் வள துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் கடல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் பணியாளர்கள் கார்த்திக் மற்றும் தேசிங்கு ஆகியோர் உடனிருந்து நடத்தினார். பயிற்சி பெற்ற அனைவருக்கும் மீன் பிடி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை