கொள்ளிடம் அருகே தற்காஸ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

 

கொள்ளிடம், மார்ச் 13: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தற்காஸ் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரிலும் ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகவடிவு தலைமை வகித்தார். ஆசிரியர் சுசிலா வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, நீர்வளத்துறை அலுவலர் ராமச்சந்திரன், கோவிந்தன், விஜய் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராணி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள், ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். ஓய்வு தலைமையாசிரியர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்பழகன், சத்துணவு அமைப்பாளர் ராமதேவன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.முடிவில் ஆசிரியர் செந்தாமரை நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்