கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு யாகம்

கொள்ளிடம், மார்ச் 26: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோயில் முன்புறம் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயில், மாதிரவேளூர் மாதலீஸ்வரர், திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் அங்குள்ள வடிவேல் குமரன் ஆலயத்திலும் பௌர்ணமி விழாவையொட்டி நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி