கொளுத்தும் கோடை காலம் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய சாலைகள்

 

மதுரை, ஏப். 26: கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலான காலகட்டத்தில் பொதுமக்கள் வெளிநடமாட்டத்தை குறைக்கத் துவங்கியுள்ளனர். பலரும் வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலான வீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களின் வருகையும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை