கொரோனா தொற்று காரணமாக வேதகிரீஸ்வரர் கோயில் மூடல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் 3 நாட்களுக்கு  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு  பக்தர்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக  நிலையான வழிகாட்டி நெறிமுறைகள்  நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி 1.8.2021  முதல் 3.8.2021 வரை வேதகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். எனவே பொதுமக்களும், பக்தர்களும் கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!