கொரோனா சிகிச்சை மையம் திறந்த இயக்குனர் லிங்குசாமி

சென்னை: ஆனந்தம், சண்டக்கோழி, ரன், பையா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாம்பாக்கத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கி உள்ளார். இது 50 படுக்கைகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் ஒரு மையமாகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், ஆகியவற்றின் உதவியுடன் பொதுமக்களின் நன்கொடையையும் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு தாராளமாக நிதி உதவி செய்யுங்கள் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்குசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த மையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்