கொரோனா ஊரடங்கு காரணமாக கொடுமணலில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தம்

ஈரோடு: கொரோனா ஊரடங்கு காரணமாக கொடுமணலில் நடைபெற்ற வந்த அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கொடுமணல், நொய்யல் ஆற்றங்கரை ஓரம் மாநில தொல்லியல் துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு திட்ட இயக்குனர் ரஞ்சித் தலைமையில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. 2,400 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான குடியிருப்புகள், பயன்பாட்டு பொருட்கள், நாணயம், மண் பானை ஓடுகள், குறிப்புகள் என பல்வேறு தரவுகள் கிடைத்து வருகின்றது. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நேற்று முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை கிடைத்த அறிய பொருட்களை ஆவணப்படுத்தும் பணி, அதற்கான குறிப்புகள் எழுதும் பணிகளில் ஊழியர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்….

Related posts

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி

கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி