கொரியன் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

சன்சியோன்: கொரியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். அரையிறுதியில் தென் கொரியாவின் ஆன் சேயங்க் உடன் நேற்று மோதிய சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுயில்  களமிறங்கிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 19-21, 16-21 என்ற நேர் செட்களில் போலந்தின்  ஜோனதன் கிறிஸ்டியிடம் 49 நிமிடங்களில் போராடி தோற்றார். இத்தொடரின் அனைத்து பிரிவிலும் இந்தியாவின் பதக்க வேட்டை ஏமாற்றத்தில் முடிந்தது….

Related posts

உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இகா

ஐசிசி டி20 உலக கோப்பை உகாண்டாவை உருட்டி விளையாடிய ஆப்கான்