கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரசுவாமி கோயில் தேரோட்டம்

கும்பகோணம், ஏப்.23:கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள பெட்டிகாளியம்மன் தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரசுவாமி கோயிலில் சித்ரா பவுர்ணமி பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, 9ம் நாளான நேற்று உற்சவர் சுவாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். திருப்பணியாளர் சென்னை மதி மகாலட்சுமி சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, துணைத்தலைவர் பெரிய சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், ஆறுமுகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா என்ற கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு