கொடைக்கானல் குண்டுபட்டி பள்ளியில் நுழைவு வாயில் திறப்பு

கொடைக்கானல், பிப். 25: கொடைக்கானல் மேல்மலை குண்டுபட்டியில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு பல்வேறு உபகரணங்கள் மற்றும் மாணவிகள், மாணவர்கள் பாதுகாப்புக்காக நுழைவு வாயில் தேவையாக இருந்தது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையையேற்று செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதிய நுழைவு வாயில் மற்றும் கேட் அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சூசை ஜான் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க தலைவரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான குரியன் ஆபிரகாம் தலைமை வகித்து பள்ளியின் நுழைவு வாயிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதர், செஞ்சிலுவை சங்க துணை தலைவர்கள் சலாமத், கருணாநிதி, செயலாளர் தாவுத் உள்பட பலர் கலந்து கொண்டானர். தொடர்ந்து பள்ளியில் நடந்த மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல்லை நகர் மன்ற தலைவர் செல்லதுரை திறந்து வைத்தார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது