கொடைக்கானலில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி

கொடைக்கானல், அக். 8: கொடைக்கானலில் வன உயிரின வார விழா வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஏரிச்சாலை முகப்பில் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமை வகித்தார்.

குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கலந்து கொண்டு வன விலங்குகள் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து பல்கலை, கல்லூரி மாணவிகள், வனத்துறை அலுவலர்கள் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் பேரணியாக ஏரிச்சாலை முழுவதும் சுற்றி நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். பேரணியில் வனம், வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அணிந்தபடி சென்றனர். இதில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் மற்றும் வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்