கொடுமுடி அருகே மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஹெச்.எம். மீது விசாரணை

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே பள்ளியில் மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஹெச்.எம். மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் பெரியூர் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 53 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக தனலட்சுமி உள்ளார். நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை தனலட்சுமி அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்து பெயிண்ட் அடிப்பதற்காக பள்ளி நேரத்தில் மாணவர்களை பயன்படுத்தியுள்ளார்.இத்தகவல் வெளியில் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் கோமதி சந்திரன் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று, பள்ளி நேரத்தில் மாணவர்களை பெயிண்ட் அடிக்க பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தினார். …

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்