கொடுமுடியில் நிலக்கடலைக்காய் ரூ.1.90 லட்சத்துக்கு ஏலம்

கொடுமுடி, டிச.21: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1,90,210 க்கு நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 72 நிலக்கடலைக்காய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 06 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 27 காசுக்கும் ஏலம் போனது. இதில், மொத்தம் 23.78 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலைக்காய் 1 லட்சத்து 90 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்