கோமாரி தடுப்பூசி முகாம்

மதுராந்தகம்: கரிக்கிளி ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் கரிக்கிளி ஊராட்சி உள்ளது. இங்குள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கொடியான் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் அன்பரசு முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் பிரியங்கா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர், கொளத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாமை பயன்படுத்தி கொண்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், தற்போது மாடுகளுக்கு கோமாரி நோய் பரவல் காணப்படுகிறது. எனவே, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமானது எங்கள் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்….

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்