கேரள சிறுமி பலாத்கார வழக்கு குமரி வாலிபருக்கு 58 வருடம் சிறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், மே 18: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 11 வயது சிறுமியை பல மாதங்கள் பலாத்காரம் செய்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கு 58 வருடம் கடுங்காவல் சிறையும், ₹1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ரதீஷ் (25). கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாதாபுரம் பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் நாதாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ரதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நாதாபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகைப், ரதீஷுக்கு 58 வருடம் கடுங்காவல் சிறையும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்