குழித்துறையில் கிராம அலுவலக வளாகத்தில் நின்ற புளியமரம் முறிந்தது நூலகத்தின் குடிநீர் டேங்க் சேதம்

மார்த்தாண்டம், டிச. 31: குழித்துறையில் கிராம அலுவலக வளாகத்தில் நின்ற புளிய மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் நூலகத்தின் குடிநீர் டேங்க் சேதம் அடைந்தது குழித்துறையில் விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் கிராம அலுவலகம், நூலகம் போன்றவை ஒரே வளாகத்தில் உள்ளது இந்த வளாகத்தில் சுமார் 50 ஆண்டு பழக்கமுடைய புளிய மரமும் நிற்கிறது. குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது இதில் இந்த புளிய மரத்தின் ஒரு பகுதி கொம்புகள் ஒடிந்து விழுந்தன. இதில் நூலகத்தின் குடிநீர் டேங்க் மற்றும் பைப்புகள் சேதமடைந்தன. மீதி நிற்கின்ற புளிய மரத்தையும் முறித்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு