குளுகுளு சீசனை அனுபவித்தபடியே கொடைக்கானல் ஏரியில் குதூகலமாக படகு சவாரி: குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இயற்கை அழகை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கை அழகை கண்டுகளித்தனர்.மேலும், நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் குளிரையும் பொருட்படுத்தாமல், குளுகுளு சீசனை அனுபவித்தபடியே, சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் நகரம் திணறியது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன்னதாக புக் செய்யப்பட்டதால், தங்க இடம் கிடைக்காமல் கூட சுற்றுலாப்பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர். நகரில், நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்ததால், இதமான தட்பவெப்பநிலையை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர்….

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி