குலசேகரன்பட்டினம் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்த பெண் சாவு

உடன்குடி,அக்.29: குலசேகரன்பட்டினம் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார். லசேகரன்பட்டினம் அருகேயுள்ள சிறுநாடார்குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்ககுமார் (51). இவரது மனைவி பாப்பா (47). இவர்களது பிள்ளைகள் வெளியூரில் தொழில் செய்துவந்தநிலையில் தசரா திருவிழாவிற்காக ஊருக்கு வந்தனர். இதனிடையே தம்பதிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 25ம்தேதி தசரா கொடியேற்றத்திற்குப்பிறகு விரதம் முடிப்பதற்காக லிங்க குமார் பிள்ளைகளுடன் அங்குள்ள மண்டபத்திற்கு சாப்பிட சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த பாப்பா விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் உடன்குடி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்துவந்த குலசேகரன்பட்டினம் போலீசார், உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து லிங்ககுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்