குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தென்மண்டல ஐஜிக்கு ஐகோர்ட் பாராட்டு

மதுரை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட போலீசாருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் போலீசார் என் மீது 2018ல் வழக்கு பதிந்தனர். இதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மனு தள்ளுபடியானது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை கேட்டபோது, அதுபோல் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். நீதிமன்றத்தில் தவறான அறிக்கையளித்த முதுகுளத்தூர் போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், ‘‘தென் மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2021 வரையிலான 65 ஆயிரம் வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 25 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. 38 ஆயிரம் வழக்குகளில் தடயவியல் துறை உள்ளிட்ட அறிக்கைகள் பெற வேண்டியுள்ளது. கடந்த 2 மாதத்தில் அதிகளவில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் டிஐஜி மற்றும் எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறையினரின் ஒத்துழைப்பால் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. இதர வழக்குகளில் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதையடுத்து, குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய துரித நடவடிக்கை எடுத்த தென்மண்டல ஐஜி மற்றும் டிஐஜி உள்ளிட்ட போலீசாருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்….

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி