குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் வெள்ளாரை கிராமம் உள்ளது. இங்கு, 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால், வெள்ளாரை கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று படப்பை துணை மின்நிலைய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், நாளுக்குநாள் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து மக்கள் கூறியதாவது:  கொளத்தூர் ஊராட்சியையொட்டி ஒட்டி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால், மின் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. தற்போது, குடியிருப்பு வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, வெள்ளாரை கிராமத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மின்சார துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, வெள்ளாரை கிராமத்தில் புதிய டிராண்ஸ்பார்மர் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்

காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு