குறுவட்ட சதுரங்க போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

 

நத்தம், ஆக. 13: நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. போட்டிகளை லாண்டீஸ் பள்ளி தாளாளர் நிக்சன் லாண்டீஸ் தொடங்கி வைத்தார். இதில் வட்டார அளவில் 33 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், மகளிர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.

14 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியும், 17 வயதினர் பிரிவில் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதினர் பிரிவில் கொசவபட்டி புனித செயின்ட் ஜோசப் பள்ளியும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை