குருவாயூர் எக்ஸ்பிரஸ் கோட்டயம் வழி இயக்கப்படும்

நாகர்கோவில், மார்ச் 13: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து மார்ச் 15ம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படுவது கோட்டயம் வழியாக இயக்கப்படும். இதனால் ஹரிப்பாடு, அம்பலப்புழா, ஆலப்புழா மற்றும் சேர்த்தலா ஆகிய நிறுத்தங்கள் ரயில் செல்லாது. கூடுதலாக செங்கன்னூர் மற்றும் கோட்டயம் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரயில் எண்: 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து மார்ச் 13ம் தேதி புறப்படுவது ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11.15க்கு பதில் 12.15 மணிக்கு புறப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை