குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது

ஈரோடு, ஏப்.7:ஈரோடு மாவட்டம் சிவகிரி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சிவகிரி போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு கடையில் குட்கா மற்றும் புகையிலை விற்றதாக சிவகிரி பாரதி வீதியை சேர்ந்த நாட்ராயன் மனைவி பூவத்தாள் (70) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், கடம்பூர் இருட்டிபாளையத்தில் குட்கா, புகையிலை விற்றதாக மளிகை கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராஜா (42) என்பவரை கடம்பூர் போலீசார் கைது செய்து, புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை