குடந்தையில் சுய விளம்பரத்திற்காக தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது  

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்தவர் சக்கரபாணி (38). கொத்தனார். இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் மாநகர செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சக்கரபாணி குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் அவரது வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் வாசனையுடன், கண்ணாடி பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. புகாரின்படி கும்பகோணம் கிழக்கு போலீசார் வந்து விசாரித்தனர்.  எஸ்.பி ரவளிப்பிரியா நேரில் விசாரித்தார். மோப்ப நாய், அப்பகுதியில் உள்ள புறவழிச்சாலை வரை சென்று திரும்பவும் சக்கரபாணி வீட்டின் வாசலில் வந்து நின்றது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சக்கரபாணி மற்றும் அவரது மனைவி மாலதியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தனித்தனியாக விசாரித்தனர். இதில் சக்கரபாணி, தன்னை மிகைப்படுத்தி கொள்வதற்காகவும், தனக்கு சுயவிளம்பரம் தேடி கொள்வதற்காகவும், போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதாலும், தானே மண்ணெண்ணெய் வெடிகுண்டை தயாரித்து வீட்டு வாசலில் வைத்து நாடகம் ஆடியதும், அந்த பாட்டிலில் எரிந்த திரியின் துணி அவர்களது வீட்டில் இருந்த போர்வையில் இருந்து கிழிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் 436ன் (வெடிபொருளால் கட்டிடத்தை சேதப்படுத்த முயற்சி) கீழ் வழக்கு பதிந்து சக்கரபாணியை நேற்றிரவு கைது செய்தனர்….

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்