கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

 

சிவகாசி, டிச.11: சிவகாசி அருகே சாட்சியாபுரம் சி.எம்.எஸ் நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மரவிழா நடந்தது. மதுரை முகவை திருமண்டலத்தின் பேராயரும் பள்ளிகளின் மேலாளருமான ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் முன்னிலை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். மதுரை முகவை பேராயத்தின் பேராயர் அம்மாமேரிஜெயசிங் வாழ்த்துச் செய்தி வழங்கினார்.

சிவகாசி வட்டார கல்வி அலுவலர்கள் திருப்பதி, அரவிந்தன், ஞானக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை பள்ளியின் தாளாளர் நவமணி வரவேற்றார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை சுவீட்லின் நவமலர் நன்றி கூறினார்.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்