கிராம ஊராட்சி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்

நல்லம்பள்ளி, ஜன.8: தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், அதியமான்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் திருவருட்செல்வன் தலைமை வகித்தார். இதில், கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், சமூக தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரின் 18 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி, வருகிற பிப்ரவரி 2ம் தேதி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில், 2லட்சம் பேர் பங்கேற்கும் பெருந்திரள் முறையிட்டு கூட்ட நடைபெறும். இந்த கூட்டத்திற்கு அனைத்து ஊராட்சி பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானமாங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் கிருஷ்ணன், பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு