கிராமமக்கள் கோரிக்கை வைப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் வேண்டும்

ஏழாயிரம்பண்ணை, ஆக.4: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாயில்பட்டி அருகே உள்ள இறவார்பட்டி பகுதியில் வைப்பாற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் கட்டி முடித்த சில மாதங்களில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. சுமார் 20 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்தப் பாலம் வழியாக ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்து வந்த நிலையில் இந்த தரைப்பாலம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது.இந்தப் பாலம் சேதமடைந்ததால் அந்த பகுதி கிராம மக்கள் ஏழாயிரம்பண்ணை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே இந்தத் தரைபாலத்தை சீரமைத்து தரும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் தற்போது நீர் குறைந்து காணப்படக்கூடிய நிலையில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, திடீரென இந்த பகுதியில் நீர்வரத்து காணப்படுவதாகவும், இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்