காலிங்கராயன் வாய்க்காலில் முதியவர் சடலம் மீட்பு

 

பவானி, ஜூலை 13: பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் மீட்கப்பட்டது. பவானியை அடுத்த கோணவாய்க்கால் அம்மணி அம்மாள் தோப்பு அருகே காலிங்கராயன் வாய்க்காலில் முதியவர் சடலம் மிதப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தண்ணீரில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முதியவருக்கு சுமார் 60 வயது இருக்கும். உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து, சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்