காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கோழிக்கழிவுகள்

 

ஈரோடு, நவ. 18: காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு லட்சுமிநகர், அசோகபுரம், அக்ரஹாரம், அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் அக்ரஹாரம் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்பட்டு வருகின்றது. இந்த கழிவுகளை அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையினால் கடும் நெடி வீசி வருகின்றது.

மேலும் கோழிக்கழிவுகளை சாப்பிடுவதற்காக ஏராளமான தெருநாய்களும் அப்பகுதியில் ஒன்று சேர்ந்து விடுவதால் வாய்க்கால் கரையில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படும் சூழல் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே குப்பைகளை வாய்க்கால் கரையில் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்