காரில் குட்கா கடத்திய இருவர் கைது

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குன்றி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களுக்கு இடையே ஹான்ஸ், விமல் பான் மசாலா, கூல்லிப், வி1 டொபாக்கோ உள்ளிட்ட போதை பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், பங்களாபுதூர் இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின்(38), கோபி நஞ்ச கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (45) ஆகிய என தெரியவந்தது.  பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து நிலைய பிணையில் விடுவித்தனர். 8 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்….

Related posts

குன்னூரில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 7031 பேர் எழுதினர்