காரியாபட்டி அருகே விவசாய நிலங்களில் மாணவிகள் ஆய்வு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற விவசாயபணி அனுபவத்திற்காக பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளின் தோட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டு, பயிரிடும் முறைகளை கேட்டறிந்தனர்.நந்திகுண்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் கொய்யா, மாதுளை,வாழை,மிளகா, பருத்தி, தக்காளி, நெல்லி, நிலக்கடலை ஆகிய பயிர்களிலுள்ள நோய் மற்றும் பூச்சித் தாக்கத்தை கட்டுப்படுத்த இயற்கை முறையிலான வேப்பமுத்து கரைசல், மீன் அமில கரைசல், பஞ்சகாவியம், மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தி செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்து வருகின்றார்.நுண்ணுயிரிகளை கொண்டு பண்ணை கழிவுகளை மட்கச்செய்யும் கழிவு சிதைப்பான் முறையை மாணவிகள் வித்யா, அன்புபாரதி, தனசேகரி, கவிதா, நந்தினி, வர்னிஷா செயல்முறை விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் மாணவிகள் கொய்யா தோட்டத்தில் கவாத்து முறையை செய்து பழகினர்….

Related posts

விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்